
முருகனுக்கு உண்டான பாடல் என்றால் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இவை எல்லாம் தான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆனால் பார்வதி தேவி தன்னுடைய ஒட்டு மொத்த சக்தியையும் வேலாக உறுமாற்றி, அந்த வேலை முருகப்பெருமான் கையில் கொடுத்துள்ளார்கள். அந்த வேலை போற்றும் வகையில் அமைந்துள்ள வேல் மாறலை பற்றிய சிறப்பை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் முருகப்பெருமானுக்கு அருணகிரிநாதர் பாடிய வேல்வகுப்பு தொகுப்புகளை எடுத்து அதை முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாக, மாற்றி மாற்றி அமைத்து 64 பாக்கள் அமைந்தது போல ஒரு மந்திர நூலாக இந்த வேல்மாறல் நூலை உருவாக்குகிறார். மொத்தம் வேல்வகுப்பிலே 16 பாடல்கள் உண்டு. இந்த 16 பாடல்களையும் நான்கு முறை திருப்பி திருப்பி போட்டால் எப்படி நாம படிக்கலாமோ அதுபோல மாற்றி மாற்றி போட்டு 64 பாடல்கள் வருவது போல அமைத்த ஒரு அழகான தொகுப்பு தான் இந்த வேல்மாறல் பாடல்.
வேல்மாறல் பாடலை பாடுவதால் முருகப்பெருமானின் கையில் உள்ள வேலின் வலிமை நமக்கு கிடைக்கும். முருகனின் வேலுக்கு என்றே ஒரு தனிசக்தி உள்ளது. அந்த வேலை வழிப்பட சில முறையும் இருக்கு. அந்த முறையோடு வேல்மாறலை படித்தால் நிச்சயம் முருகனுடைய வேல் உங்களுக்கு அரணாக இருக்கும்.
முருகனின் வேலின் சக்தி என்னவென்றால்,
சிவபெருமான் முருகனை சூரசம்ஹாரத்திற்கு புறப்படு என்று சொல்லும் போது, அவர் பதினொரு கரங்களுக்கும் பதினொரு ஆயுதங்களை கொடுத்தார். மொத்தம் முருகப்பெருமானுக்கு 12 கைகள். அதில் ஒரு கையில் மட்டும் ஆயுதம் இல்லாமல் சும்மா இருந்தது. தேவேந்திரனுக்கு ஒரு பயம் வந்தது. எங்கே முருகன் அந்த ஒரு கையை அபயவரதமாக காட்டிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து நிற்கும் போது, சிவப்பெருமான் உலகத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றாக திரட்டி வேலாக மாற்றி, பார்வதி அம்பாள் கையில் கொடுத்து, இந்தவேலை சக்தி வேலாக மாற்றி முருகனிடம் கொடு என சிவபெருமான் கூற, பார்வதி அம்பாள் வாங்கி அந்த வேலில் தன்னுடைய சக்தியை சேர்த்து அந்த வேலை முருகப்பெருமானின் கையில் பார்வதி அம்பாள் கொடுக்கிறாள். அப்படிபட்ட வேலில் எந்தவிதமான ஆற்றல் இருக்கும் என்று புரிகிறதா? இதில் இல்லாத ஆற்றல் வேறு எதுவும் உண்டோ?
இத்தகைய வேல் என்ற ஆயுதமானது சூரனை போன்ற கொடியவர்களை அழிக்கும் ஆயுதம் மட்டும் கிடையாது. காக்கும் ஆயுதமும் ஆகும். ஆயுதம் என்றாலே அது அழிக்கக்கூடியதுதானே என்று பலருக்கும் தோன்றும். கத்தியை வைத்தி கொலையும் செய்யமுடியும் அதே கத்தியை வைத்து ஆப்ரேஷனும் செய்ய முடியும் அல்லவா?அதுபோல ஒரு பொருளை யார் பயன்படுத்துகிறார்கள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியம்.
ஆகவே வேல் என்பது பகைவர்களுக்கு அழிக்கும் பொருளாகவும், பக்தர்களுக்கு காக்கும் பொருளாகவும் இருந்து நம்மை அரணாக காக்கக்கூடியது. இத்தகைய வேலை நாம் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். இத்தகைய வேலிற்கான வழிபாட்டு பாடல் தான் வேல்மாறல்
நியாயமான,நேர்மையான, தர்மமான வாழ்க்கை மேன்மை அடைய வேண்டும் என்றால், இதுக்கு மேல என்னால் போராட முடியாது என்று யாரெல்லாம் துவண்டு இருக்கிறீர்களோ, அவர்களுக்கெல்லாம் கடைசி பிரமாஸ்திரம் வேல்மாறல்.
வாழ்க்கையில் ஒரு தடவையாவது நம்மை நடுங்க வைக்கக்கூடிய பகை ஒன்று வந்தே தீரும். அந்த சமயத்தில் அத்தகைய அச்சம் போக்கும் சர்வ வல்லமை, தொடர்ந்து வேல்மாறலை படிப்பவர்களுக்கு உண்டாகும். அதுமட்டும் அல்ல குழந்தை சம்மந்தப்பட்ட விஷயத்திற்கு மாபெரும் வெற்றியை தரக்கூடியது, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயத்திற்கான பலனை வேல்மாறல் தருகிறது.
திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
வேல் மாறலை பற்றி ஒருவர் சொல்லி தெரிந்து கொள்வதை விட, 48 நாள் தொடர்ந்து பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து இந்த நான்கு வரிகளை சொல்லிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்காத அதிசயங்கள் நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்கும்.