திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தினமும் 300 ரூபாய் தரிசன டிக்கெடுகளை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே வழங்கி வந்தது.
கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அந்த டிக்கெட் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநில அரசு பேருந்துகளில் டிக்கெட் பெறும்போது 300 ரூபாய் தரிசன டிக்கெட் வினியோகம் செய்யும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டது. தினமும் இந்த முறையில் 1000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.