தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோயில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும்.
சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில், சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியே ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஆடித்தவசு திருவிழாவனது 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கொடியேற்ற விழாவில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்வுகளான திருத்தேரோட்டம் வருகிற 19-ஆம் தேதியும், தொடர்ந்து தவசுக்காட்சி வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.