• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்கதர்கள் கூட்டம்

  • Share on

திருச்செந்தூரில் ”தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2 வது படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணியர் இக்கோவிலில் வருடந் தோறும் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும்.

இதில் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூச திருவிழா இத்திருவிழாவானது இன்று 28.01.2021 (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இன்று அதிகாலை 3மணிக்கு நடை திறந்து 3.40 மணிக்கு விஸ்வ ரூப தீபாராதனையும், 6மணி அளவில் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடந்தது.


8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகமும் நடக்க இருக்கிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்து  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும்,அழகு குத்தியும், பாத யாத்திரையாகவும் வந்து சாமி தரிசனம் செய்தனர். 

  • Share on

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா - கொடியேற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது

திருச்செந்தூர் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

  • Share on