• vilasalnews@gmail.com

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா - கொடியேற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது

  • Share on

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது.

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை முத்துக்குமார சுவாமி வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் வீதியுலா வருகை தர உள்ளார். திருவிழாவின் 6-ம் நாளான 27-ந்தேதி இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி 4 ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவின் 7-ம் நாளான 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவில் கிழக்கு வாசலில் உள்ள திருத்தேருக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தேரேற்ற நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலுடன் தேரோட்டமும் தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து, தேர் நிலை வந்து சேர்ந்த பின் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல், ரதவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  • Share on

சபரிமலை மகரவிளக்கு பூஜை.. இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்கதர்கள் கூட்டம்

  • Share on