சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை கடந்த டிசம்பர் 26-ந் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.
கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் குறைவான பக்தர்களே மண்டல பூஜைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜனவரி 19-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் 5,000 பக்தர்கள் சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.