சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கேரள மாநிலம் சபரிமலை மலை பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் கடந்த மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, கடந்த 22-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
நேற்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து இன்று மதியம் மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மண்டல பூஜை விழாவை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது.