• vilasalnews@gmail.com

திருச்செந்தூா் கோயிலில் வருஷாபிஷேகம்

  • Share on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற 8ஆம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகிறது. 

தொடா்ந்து, கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். காலை 8.30 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மார்ச் 1ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா- சற்குரு சீனிவாச சித்தர் அழைப்பு!

ரெங்கா ரங்கா என பக்தி கோசம் விண்ணை பிளக்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

  • Share on