அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மூலம் மட்டுமே கட்டப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோடிக்கணக்கான பக்தர்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே இந்த கோயில் கட்டப்பட உள்ளது.
மேலும், கோயில் கட்டுவதற்கு அரசாங்கப் பணத்தை ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பணவிஷயத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காக 10, 100 மற்றும் 1000 ரூபாய்க்கான டோக்கன்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் சம்பத் ராய் கூறியுள்ளார்.