• vilasalnews@gmail.com

உத்திரமேரூர் கோவில் புனரமைப்பு பணியின் போது 'தங்க புதையல்' கண்டெடுப்பு!

  • Share on

குலம்பேசுவரர் கோவில் புனரமைப்பு பணியின் போது தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, ஊர் பொதுமக்களும், கோவில் விழாக்குழுவினரும் முடிவு செய்தனர்.

இதற்காக பழங்கால கோவிலை இடிக்க முடிவு செய்தனர். வருவாய்த்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த பணியினை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஜே.சி.பி கொண்டு கோவில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றினர். அப்போது அதன் கீழ் இருந்த துணியால் சுற்றப்பட்ட சிறிய மூட்டையில் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

சுமார் 100 சவரன் அளவில் தங்க நகைகள் இருந்துள்ளன. தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கோவிலை முற்றிலும் இடித்துள்ளனர்.

கோவில் இடிப்பு மற்றும் புதையல் குறித்த தகவல் அறிந்த வருவாய்துறையினர், காவல்துறையினருடன் கோவிலுக்கு வந்து பொதுமக்களிடமிருந்த நகைகளைக் கைப்பற்றி மதிப்பீடு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு

சபரிமலையில் ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா

  • Share on