மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் தைப்பூச விழா நடைபெற்றது.
சக்திகொடியை கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றி வைத்தார். குருபீட வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார்.
விவசாயம் வளம்பெறவும், மக்கள் வளமுடன் வாழவும், தொழில்வளம் சிறக்கவும், தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் வேண்டி 504 பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அபிஷேக நிகழ்ச்சியை கோவை அன்னூர் சக்தி பீட தலைவர் சண்முகவேலு துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்தார். அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட மகளிர் அணி தலைவி கோவில்பட்டி பத்மாவதி தொடங்கி வைத்தார்.
விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் செந்தில் சுப்பிரமணியன், பொருளாளர் கண்ணன், இளைஞர் அணி செல்லத்துரை, சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, வட்டதலைவர்கள் பால்ச்சாமி, அழகர், சக்திபீட பொறுப்பாளர்கள் பத்மாவதி, செல்வி, காசியம்மாள், சீனிவாசன், பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.