மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி கிராமத்தில் கிராம நல வழிபாடு நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார்.
ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு கொரானா கொடிய நோய் நீங்கி மக்கள் நலமுடன் வாழவேண்டி 108 குரு போற்றி, 108 அம்மா போற்றி படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தொடந்து திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அன்னை அருளிய முறைப்படி வளைகாப்பு விழா நடைபெற்றது. இதனையடுத்து அனைவருக்கும் அன்னையின் திரு உருவப்படம், அருட்பிரசாதம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. இணைச்செயலர் (பிரச்சாரம்) சக்தி. முத்தையா ஆன்மிக செற்பொழிவாற்றினார்.
விழாவில், பஞ். தலைவர் மாரியப்பன், ஆன்மிக இயக்க நிர்வாகிகள் பண்டார முருகன், மகளிர் அணி பத்மாவதி, இளைஞர் அணி தலைவர் செல்லத்துரை, திருவிக சக்தி பீட மகளிர் அணி பிரமிளா, பத்மா, வட்டத்தலைவர் பால்ச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வானரமுட்டி மன்ற பொறுப்பாளர்கள் நாரம் பூநாதன், முருகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.