• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை டிசம்பர் 06, 2021

  • Share on

பிலவ ஆண்டு I கார்த்திகை 20 I திங்கட்கிழமை I டிசம்பர் 6, 2021

மேஷம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் ஓரளவுக்கு சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

ரிஷபம்

ஏற்ற இறக்கம் என இரண்டும் கலந்த நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் காணப்படும். வேலையில் பதற்றமான சூழல் இருக்கும். இருப்பினும் சரியான நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவ அனுசரித்து நடக்க வேண்டும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

சமநிலையான நாளாக இருக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்

அனுகூலமான நாளாக இருக்கும். இன்று பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். புதிய முயற்சிகளில் இறங்கலாம். வேலையில் சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் கொடுக்கப்பட்ட வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

முன்னேற்றத்துக்கு ஏற்ற நாள் இன்று. புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சாதிப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் நல்லுறவைத் தக்க வைக்க விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.

கன்னி

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு கவலையை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். இருப்பினும் அதிக செலவு செய்வீர்கள். இதனால் பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஓத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான உறவு நிலவும். கணவன் மனைவி இடையே நம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

ஏற்ற இறக்கம் இல்லாத சமநோக்கு நாளாக இருக்கும். சற்று அமைதியின்மையை உணர்வீர்கள். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் சவால்களை சமாளிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். மிக வேகமாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை லாபகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைப் பெற்றுத் தரும். வேலையில் வளர்ச்சிக் குறைந்து காணப்படும். திறமையை வெளிப்படுத்தி வேலையை முடிக்க வேண்டும். குடும்பத்தில் நட்புறவுடன் பழக வேண்டும். இதன் மூலம் கணவன் மனைவி இடையே உறவில் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். . நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாளாக இருக்கும்.

கும்பம்

இன்று நடுநிலையான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் அனைத்தையும் எதிர்கொண்டு சாதிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.  நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உறுதியுடனும் நேர்மையுடனும் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். நிலுவையிலிருந்த வேலை எல்லாவற்றையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இனிமையான சூழல் நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

  • Share on

இன்றைய ராசி பலன் - ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 05, 2021

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழிமாத பூஜை விபரம்!

  • Share on