பிலவ ஆண்டு I கார்த்திகை 19 I ஞாயிற்றுக்கிழமை I டிசம்பர் 5, 2021
மேஷம்
தைரியத்துடன் செயல்பட்டால் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வழக்கமான வேலையைக் கூட சரியான நேரத்தில் முடிக்க முடியாது திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும். கவனத்துடன் செயல்பட்டால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
ரிஷபம்
சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்கலாம். வேலை சூழல் அபாரமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தின் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக அமையும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
கடகம்
சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். பொறுமையாக செயல்பட்டால் தவறுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் மனக் குழப்பம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தும்.
சிம்மம்
சுமாரான நாளாக இருக்கும். சாமர்த்தியமாகச் செயல்பட்டால் இன்றைய நாளை எதிர்கொள்ளலாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியுடன் மோதல் போக்கை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கடினமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உறவு நிலை பாதிக்கப்படும். நிதி நிலை கட்டுக்குள் இருக்காது. வீண் செலவுகள் ஏற்படும்.
கன்னி
உற்சாகமான நாளாக இருக்கும். திறமையை நிரூபிப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். இதனால் வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.
துலாம்
இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். வீண் உணர்ச்சிப்படுவதை தவிர்க்க வேண்டும்.வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் பதற்றமான சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைவு நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
விருச்சிகம்
வெற்றி பெற நிதானத்துடன் செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றியை சாத்தியமாக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது..
தனுசு
சற்று கடினமான நாளாக இருக்கும். நம்பிக்கையைக் கைவிடாமல் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்காது. வேலையில் வீண் தாமதங்கள் ஏற்படும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத போக்கு காரணமாக வீண் தாமதங்கள் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகரம்
மன உறுதிமிக்க நாளாக இருக்கும். இன்று மகிழ்ச்சியான சூழலைக் காண்பீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு வலுப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கும்பம்
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மீனம்
சாதகமான நாளாக இருக்கும். மனதில் அமைதி நிலவும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையில் கவனத்தைச் செலுத்தி விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். இருப்பினும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.