• vilasalnews@gmail.com

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு

  • Share on

தமிழ்நாட்டில், கிறிஸ்தவ தேவாலயங்களில் நற்கருணை எனப்படும் அப்பங்களை, நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம் என்றும், அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கிறிஸ்தவ தேவாலயங்களில், பிரார்த்தனைகள், திருப்பலிகளில் பங்கேற்போர் மீது, புனித நீர் தெளிக்கவும், அப்பங்களை வழங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழா மாதம் என்பதால், சற்று தளர்வுகள் அளிக்கப்படுவதாகத் கூறியுள்ளார்.

இதன்படி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களையொட்டி நடைபெறும் திருப்பலிகள், பிரார்த்தனைகளின்போது, நற்கருணை எனப்படும் அப்பங்களை, தனித்தனி கப்களில் வழங்கலாம் என்றும், தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 

  • Share on

ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் அணிந்து வரவேண்டாம் - சீரடி ஆலய நிர்வாகம்

உத்திரமேரூர் கோவில் புனரமைப்பு பணியின் போது 'தங்க புதையல்' கண்டெடுப்பு!

  • Share on