பைரவாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு 64வகையான அபிஷேகத்துடன் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி & மஹா காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது.
''பைரவாஷ்டமி''யை முன்னிட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி 'சாக்தஸ்ரீ' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
பைரவாஷ்டமி அன்று மஹா காலபைரவரை மனம் உருக வணங்கினால் வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்திடும் என்பது ஐதீகமாகும்.
இதன்படி, பைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் போகவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்து செல்வம் பெருகவேண்டியும், பக்தர்கள் கடன் இல்லாமல் செல்வ வளத்துடன் வாழவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கும், மஹா பிரத்தியங்கிராதேவிக்கும் மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
முன்னதாக மஹா காலபைரவருக்கு பால், பழம், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர், குங்கும், நெல், அன்னம், சங்கு, ருத்திராட்சம், தாமரை, புனுகு, அருகம்புல் உள்ளிட்ட 64வகையான அபிஷேகமும், மலர்களான சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாரதனையுடன் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் , அரசின் வழிகாட்டுதல்படி பக்தர்கள் முககவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் வழிபட்டனர்.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.