பிலவ ஆண்டு I கார்த்திகை 6 I திங்கட்கிழமை I நவம்பர் 22, 2021
மேஷம்
சுமாரான நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோற்றும். இவற்றைத் தவிர்க்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அகந்தை போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே அமைதி பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
வளர்ச்சிக் குறைவான நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். அனுசரித்து நடப்பதன் மூலம் இன்றைய நாளை சமாளிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு நிலவ மென்மையாக நடந்துகொள்வது நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்
சோர்வான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்படலாம். மனம் தளர வேண்டாம். வேலை சூழல் வெற்றி கரமாக இருக்காது. வேலையில் தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். செலவு கூடுதல் கவலையை ஏற்படுத்தலாம்.
கடகம்
முயற்சி செய்தால் வெற்றி பெறுவீர்கள். எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து செயல்படுவது வெற்றியைப் பெற்றுத் தரும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் அனைத்தையும் சுறுசுறுப்புடன் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே இடைவெளி அதிகரிக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவினங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
ஆற்றல் மிக்க நாளாக இருக்கும். வெற்றி பெற மனம் தளராமல் முயற்சியைத் தொடர வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். உரையாடும் போது அதீத கவனம் தேவை. நிதி நிலை சிறப்பாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
கன்னி
தடைகள் சிலவற்றைச் சந்திக்க நேரிடலாம். இருப்பினும் நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி பெறலாம். உடன் பணி புரிபவர்களுடன் பழகும் போது கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். நல்லுறவு பாதிக்கப் படலாம். பண வரவுக்கு வாய்ப்பு சிறிதளவு உள்ளது. திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.
துலாம்
பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் பிணைப்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்பட வாழ்க்கைத் துணைவருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். செலவுகளைக் கண்காணிக்க வேண்டும்.
விருச்சிகம்
நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய நாள். நிதானமின்மை இன்றைய நாளின் வெற்றிக்குத் தடைக்கல்லாக மாறிவிடலாம். வேலை சூழல் இறுக்கம் மிகுந்ததாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே விவாதங்கள் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது.
தனுசு
நன்மை தீமை என இரண்டும் கலந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் இறுக்கம் மிகுந்ததாக இருக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரித்து தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பதற்றமான சூழல் காணப்படும். அனுசரித்து நடப்பது நல்லது. நிதி நிலை கடினமாக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
மகரம்
நிதானத்துடன், பொறுப்புணர்வுடன் நடந்தால் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். வேலை சூழல் சுமாராக இருக்கும். வேலையில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு காணப்படும். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவரின் புரிதலைப் பெறலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். கையிருப்பு குறையும்.
கும்பம்
சுமாரான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். நேர்மறையான அணுகுமுறை மூலம் வேலை சூழலை சாதகமாக்கலாம். வேலை சூழல் சவால் நிறைந்து காணப்படும். குடும்பம் தொடர்பான கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கலாம். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக உள்ளது. செலவு விஷயத்தில் ஒன்றுக்கு பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.
மீனம்
கவலையான நாளாக இருக்கும். கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.