பிலவ ஆண்டு I கார்த்திகை 4 I சனிக்கிழமை I நவம்பர் 20, 2021
மேஷம்
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் நன்றாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதம் எழலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை மிதமாக இருக்கும்.
ரிஷபம்
சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஈகோ காரணமாக பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
மிதுனம்
மந்தமான நாளாக இருக்கும். முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும். நன்கு சிந்தித்து, திட்டமிட்டுச் செயல் படுவது நல்லது. வேலையை சுறுசுறுப் பாக செய்வீர்கள். இதன் மூலம் சாதகமான பலன்களைக் காணலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் தடுமாற்றம் மிக்கதாக இருக்கும். வேலையை திட்டமிட்டு அட்டவணைப்படுத்திச் செயல்படுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
அலைச்சலான நாளாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலை சூழல் சாதாரணமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவாது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.
கன்னி
வாய்ப்புகள் மிகுந்த நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். இதனால் குழப்பமான சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். கையிருப்பைக் கொண்டு சமாளிப்பீர்கள்.
துலாம்
சாதகமான நாளாக இருக்காது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தாமதங்கள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
திருப்தியான நாளாக இருக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.
தனுசு
மிகவும் நல்ல நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் உற்சாகம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அபரிமிதமாக உள்ளது. ஆதாயம் காண்பீர்கள்.
மகரம்
நன்மை, தீமை இரண்டும் கலந்து காணப்படும். புத்திசாலித்தனத்தின் மூலம் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலையில் நாட்டமின்மை அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.
கும்பம்
மன அழுத்தம் மிக்க நாளாக இருக்கும். கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டு, அங்கீ காரம் கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதைவிட அதிகமாக இருக்கும்.
மீனம்
பலன்கள் நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.