• vilasalnews@gmail.com

சதுரகிரியில் மழை : பக்தர்களுக்கு தடை!

  • Share on

சதுரகிரி மலைப்பகுதியில் மழையும், ஓடைகளில் நீர்வரத்தும் இருப்பதால் இன்று ஐப்பசி பிரதோஷ வழிபாடு, நவம்பர் 4ல் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் வனத்துறை அறிவித்துள்ளது.

பௌர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவது வழக்கம்.

சில நாட்களாக சதுரகிரி வனப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து உள்ளது சிறிது நேரம் பலத்த மழை பெய்தால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளது.

இதனால் இன்று நடக்கும் பிரதோஷம், நவம்பர் 4ல் அமாவாசை வழிபாட்டிற் காக இன்று முதல் நவம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

  • Share on

இன்றைய ராசி பலன் - செவ்வாய்க்கிழமை அக்டோபர் 28, 2021

திருச்செந்தூர் : சூரனை வேல் கொண்டு வதம் செய்த முருகன்!

  • Share on