பிலவ வருடம் I ஐப்பசி 11 I செவ்வாய்க்கிழமை I அக்டோபர் 28, 2021
மேஷம்
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். மன உறுதியுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.
ரிஷபம்
எதிர்காலம் தொடர்பான திட்டமிடுதலை இன்று மேற்கொள்ளச் சாதகமான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவது அவசியம். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதிநிலை சாதகமாக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
திட்டமிட்டு செயல்பட்டால் சிறந்த பலன்கள் கொண்ட நாளாக மாற்றியமைக்க முடியும். என்ன நடந்தாலும் அதை சகஜமாக எடுத்துக்கொள்ள முயல வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும்.
கடகம்
கடினமான நாளாக இருக்கும். காரியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.
சிம்மம்
சிறப்பான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வேலை சூழல் சாதகமாக இருக்க விவேகத்துடன் செயலாற்ற வேண்டும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கன்னி
பரபரப்பான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி உற்சாகம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் அனைத்தையும் எதிர்கொண்டு சரி செய்வீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவை நிறைவேற்றுவீர்கள்.
துலாம்
சாதகமான நாளாக இருக்காது. முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். செயல்களில் கூடுதல் கவனம் தேவை. வேலையில் இனிமையான சூழல் காணப்படாது. கவனக்குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். பக்குவமான முறையில் நடந்து கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இடையே அமைதி தக்க வைக்கலாம். பணப்புழக்கம் சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
விருச்சிகம்
மந்தமான நாளாக இருக்கும். வளர்ச்சி முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்தையும் சகஜமாக எடுத்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். இருப்பினும் வேலைகளைக் குறித்த நேரத்துக்குள் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். விட்டுக் கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதியைத் தக்கவைக்க முடியும். நிதிநிலை சாதகமாக இருக்காது. பணத்தேவை அதிகரிக்கும்.
தனுசு
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். மனதில் மகிழ்ச்சி தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மகரம்
விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக அமையத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பை வெளிப்படுத் துவார்கள். இதனால் கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். ஓரளவுக்குப் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.
கும்பம்
மனக்குழப்பம் பதற்றம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். கூடுதல் பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனச் சிதறலைத் தவிர்ப்பதன் மூலம் வேலையை விரைவாக முடிக்கலாம். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடியாத அளவுக்கு வேலைப்பளுவும் இருக்கும். இதனால் குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதிநிலை சுமாராக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படலாம்.
மீனம்
நம்பிக்கையான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலையில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மனவருத்தம் மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.