பிலவ வருடம் I ஐப்பசி 4 I வியாழக்கிழமை I அக்டோபர் 21, 2021
மேஷம்
தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். செயல்களில் கூடுதல் கவனம் தேவை. வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
ரிஷபம்
யதார்த்தமாக நடந்துகொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வேலை சூழல் சுமாராக இருக்கும். வேலைப் பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் இணக்கமான சூழல் காணப்படாது. விட்டுக்கொடுப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் அமைதியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்
ஆதாயமான நாளாக இருக்கும். மன அமைதி காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கடகம்
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு மறையும். நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கலாம்.
சிம்மம்
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். அணுகுமுறையில் யதார்த்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
கன்னி
அனுகூலமான நாளாக இருக்கும். தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். அனைத்தையும் துணிவுடன் சிறப்பாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே இணக்கமான சூழல் நிலவும். நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
துலாம்
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். விரைவாக செயல்படுவீர்கள். இருப்பினும் மற்றவர்களுடன் பேசும் போது கூடுதல் கவனம் தேவை. வேலை சூழல் கடினமாக இருக்கும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்வதன் மூலம் சுறுசுறுப்பாக வேலையை முடிக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு வலுப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும்.
விருச்சிகம்
முயற்சி வெற்றிபெறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
தனுசு
கடினமான நாளாக இருக்கும். எதிர்காலம் தொடர்பான கவலை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். வேலையில் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நல்லுறவைத் தக்க வைக்க முடியும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.
மகரம்
பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது நல்லது. வேலை சூழல் சிறப்பாக இருக்கும். பாதுகாப்பான மன உணர்வைப் பெறுவீர்கள். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சீராக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்
ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். வளர்ச்சியில் பாதிப்பை எதிர்கொள்ளலாம். வேலை சூழல் அலைச்சல் மிகுந்ததாக இருக்கும். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வரவும் செலவும் இணைந்தே காணப்படும்.
மீனம்
அசௌகரியம் காணப்படும் நாளாக இருக்கும். சூழலுக்கு ஏற்ப செயல்படுவது முக்கியம். வேலை சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். அமைதியாக இருப்பது நல்லது. பணப் புழக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது, திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.