பிலவ வருடம் I ஐப்பசி 1 I திங்கட்கிழமை I அக்டோபர் 18, 2021
மேஷம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடைபெறும். உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலைகளை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும்.எதிர்பாராத வகையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை சூழல் சாதகமாகஇருக்கும். திருப்திகரமாகவேலையை முடிப்பீர்கள்.மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பயனுள்ளவகையில் செலவு செய்வீர்கள்.
மிதுனம்
சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில்ஈடுபடுவது அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் மனஉளைச்சலை ஏற்படுத்தலாம். எனவே, விழிப்புடன் இருந்து திட்டமிட்டு வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் அன்பற்றசூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாகஇருக்காது. செலவுகள்அதிகரிக்கும்.
கடகம்
எதிர்காலத்தைத் திட்டமிட்டு செயல்பட இன்றைய தினம்சிறப்பானதாக உள்ளது. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நிறுத்தி நிதானமாக செயல்பட வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் நட்புறவை பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் ஈகோ காணப்படும்.கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
சிம்மம்
கடினமான நாளாக இருக்கும். மன பதற்றம், மன அழுத்தம் அதிகரிக்கலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில்அன்பற்ற போக்கு காணப்படும்.இதனால், கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலைசாதகமாக இருக்காது. பணஇழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
கன்னி
மந்தமான நாளாக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பதற்றம் இன்றி மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. வேலை சூழல் சிறப்பாக இருக்காது. வேலையை விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள். ஆனால் முடியாது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையலாம். கடன் வாங்கி செலவு செய்யும் சூழல் ஏற்படலாம்.
துலாம்
இன்று உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். சாதகமான பலன்களைப் பெற திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வேலைப் பளு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பற்றாக்குறை அதிகரிக்கும்.
விருச்சிகம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் அதீத உற்சாகம் ஏற்படும். அதனால் அவசரமாக முடிவெடுப்பீர்கள். அதுவே பிரச்னையை ஏற்படுத்தி விடலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
தனுசு
வாய்ப்புகள் நிறைந்த சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.
மகரம்
குழப்பமான, மன வருத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சௌகரியத்தை விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் இன்றைய நாளை சாதகமான தாக்கலாம். வேலை சூழல் இறுக்கமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டாம். குடும்பத்தில் ஈகோ மனநிலையை விடுத்து இயல்பாக இருப்பது நல்லது. இதன் மூலம் குடும்பத்தின் மகிழ்ச்சியை தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம்
சவாலான நாளாக இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இருக்காது என்பது கவலையை ஏற்படுத்தும். வேலை சூழல் சுமாராக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கவலையை ஏற்படுத்தும்.
மீனம்
அனுகூலமான நாளாக இருக்கும். மன அமைதி காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.