• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 17, 2021

  • Share on

பிலவ வருடம் I புரட்டாசி 31 I ஞாயிற்றுக்கிழமை I அக்டோபர் 17, 2021

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வெற்றிகளை எளிதில் அடைவீர்கள். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

ரிஷபம்

திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலை சூழல் சுமாராக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறைந்து அமைதியின்மை அதிகரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம்.

சிம்மம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையைச் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே இனிமையான உரையாடல் காணப்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். நற்பலன்களைக் காண்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். நிதி நிலை சீராக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

துலாம்

வழக்கமான காரியங்களை செய்வதாக இருந்தாலும் கூடுதல் கவனம் தேவை. வெற்றியில் தடைகள் காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம்.செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

கவலையான நாளாக இருக்கும். உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக்கொள்வது நல்லது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலையை முடிக்கலாம். குடும்பத்தில் சகஜமாக நடந்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

தனுசு

தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் செயல்பட்டால் இலக்குகளை அடைவீர்கள். வேலை சூழல் விரும்பத்தக்கதாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

கடினமான நாளாக இருக்கும். சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்

போராட்டமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். இதனால் உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் சுமுக உறவு இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.

மீனம்

சாதகமான நாளாக இருக்காது. மனதில் கவலை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. சௌகரியத்தை விட்டுக்கொடுக்க வேண்டியி ருக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதைத் தவிர்த்துவிடுங்கள். நிதி நிலை சுமாராக இருக்கும். சேமிப்புக்கான வாய்ப்பு இருக்காது.

  • Share on

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை அக்டோபர் 16, 2021

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை அக்டோபர் 18, 2021

  • Share on