பிலவ வருடம் I புரட்டாசி 30 I சனிக்கிழமை I அக்டோபர் 16, 2021
மேஷம்
இன்று நம்பிக்கையான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளில் மகிழ்ச்சியடைவீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். வேலையை விரைவாகவும் திறமையாகவும் முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். இருவரிடையே புரிதல் அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாகவும் திருப்திகரமாகவும் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்படலாம்.
மிதுனம்
மந்தமான நாளாக இருக்கும். கடினமான சூழல் காணப்படும். உறுதியுடன் செயல்பட்டால் அனைத்தையும் எதிர்கொள்ள முடியும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தாமதங்கள் காணப்படும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அமைதி காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். நிதி விஷயத்தில் கவனக்குறைவு அதிகரிக்கும்.
கடகம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். திறமையுடன் செயல்பட்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு வளரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
சாதகமான பலன்கள் காணப்படும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாளாக இருக்கும். வேலையை நேர்மையுடன் நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை காரணமாக நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது.
கன்னி
யதார்த்தமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் சஞ்சலமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப் படலாம். நிதி நிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
சாதகமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் நாட்டமின்மை அதிகரிக்கும். குடும்பத்தில் ஈகோ பிரச்னை காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி குறைவு ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் உற்சாகத்தை அளிக்கும். விரைவாக வேலையை முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கலாம்.
தனுசு
சுமாரான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறாமல் மன வருத்தம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலையைச் சரியான நேரத்தில் முடிக்க முயலலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
மகரம்
உங்களுக்குக் கவலை அளிக்கும் வகையிலான சூழ்நிலைகள் இன்று காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். புத்திசாலித் தனத்துடன் செயல்படுவது நல்ல பலனைப் பெற உதவும். குடும்பத்தில் பதற்றமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்படலாம்.
கும்பம்
மந்தமான நாளாக இருக்கும். விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பணப்புழக்கம் சாதகமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.
மீனம்
தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். முயற்சிகள் வெற்றி பெற மன உறுதியுடன் செயல்படுவது அவசியம். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.