• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை அக்டோபர் 15, 2021

  • Share on

பிலவ வருடம் I புரட்டாசி 29 I வெள்ளிக்கிழமை I அக்டோபர் 15, 2021

மேஷம்

சாதகமான நாளாக இருக்கும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறாமல் சோர்வு ஏற்படலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

சவாலான நாளாக இருக்கும். நிதானத்துடன் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் போராட்டமான சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். வாயிலிருந்து வரும் வார்த்தை காரணமாக கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வீண் செலவுகள் காணப்படும்.

கடகம்

சிறப்பான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு இன்றைய நாளை சாதகமானதாக மாற்றுவீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். நிலுவையிலிருந்த வேலையையும் விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் வெளிப்படைத்தன்மையுடன் பழகுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

மந்தமான நாளாக இருக்கும். குழப்பம் அதிகரிக்கும். முன்னேற்றம் இருக்காது. வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

கன்னி

சுமாரான நாளாக இருக்கும். உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்திருப்பது இன்றைய நாளை சாதகமானதாக மாற்றும். கடின உழைப்பின் மூலம் வேலை சூழலை உங்களுக்கு சாதகமானதாக மாற்றுவீர்கள். உடன் பணி புரிபவர்களுடன் விட்டுக் கொடுப்பது நல்லது. குடும்பத்தில் ஈகோ பிரச்னை அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கலாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

துலாம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை சூழல் இறுக்கமாக இருக்கும். வேலையில் அலைச்சல் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான உணர்வு இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப் படலாம். நிதி நிலை சிறப்பாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்

சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உறவு சமநிலை காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு சிறிது உள்ளது. செலவுகள் அதிகமாக இருக்கும்.

தனுசு

அலைச்சலான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவுகள் அதிகமாக இருக்கும்.

மகரம்

இன்று சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம். வேலையில் முன்னேற்றம் இருக்காது. திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு நிலவ அமைதியாக இருப்பது நல்லது. பணப் புழக்கம் சாதகமாக இல்லை.

கும்பம்

வாய்ப்பு குறைவான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத் துவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குடும்பத்தின் ஆரோக்கியமான உறவைப் பராமரிக்கலாம். பணப்புழக்கம் சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

மீனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். வேலை சூழல் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும். சுறுசுறுப்புடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

  • Share on

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை அக்டோபர் 14, 2021

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை அக்டோபர் 16, 2021

  • Share on