பிலவ வருடம் I புரட்டாசி 28 I அக்டோபர் 14, 2021 I வியாழக்கிழமை
மேஷம்
மகிழ்ச்சியான நாளாக இருக்காது. மனம் அமைதியாக இருக்க ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சிறப்பாக இருக்காது. சேமிப்பு குறையும்.
ரிஷபம்
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
சாதகமான நாளாக இருக்கும். மனதில் அமைதி நிலவும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். நிலுவையில் இருந்த வேலையைக் கூட விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.
கடகம்
வழக்கமான நாளாக இருக்கும். நிதானத்துடனும் அமைதியுடனும் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் காரியத்தில் கண்ணாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே அன்பு குறைவு காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். எதிர்காலம் தொடர்பான கவலை அதிகரிக்கும்.
சிம்மம்
நேர்மையான அணுகுமுறை காணப்படும். மனதில் அமைதி நிலவும். வேலை சூழல் பலன்கள் நிறைந்ததாக இருக்கும். திறமையுடன் செயல்பட்டு வேலையை முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி
கவலையான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்காமல் அவதியுறுவீர்கள். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு அதிகரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
துலாம்
சாதகமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். திருப்தியுடன் வேலையை முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இணக்கமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
சாதகமான நாளாக இருக்காது. எதிர்பாராத விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். அதை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக அலைச்சல் அதிகரிக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
தனுசு
ஏற்ற இறக்கங்கள் கொண்ட நாளாக இருக்கும். அமைதியாக இருப்பது இன்றைய நாள் பாதகமில்லாமல் இருக்க துணை செய்யும். வேலையில் அசௌகரியமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.
மகரம்
சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு வழங்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
கும்பம்
வாய்ப்புகள் மிகுந்த நாளாக இருக்கும். வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
மீனம்
அனுகூலமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். வேலை சூழல் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.