பிலவ வருடம் I புரட்டாசி 25 I திங்கட்கிழமை I அக்டோபர் 11, 2021
மேஷம்
மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டிய நாள். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை முடிக்கமுடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். அதீத உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பண வரவு சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்படலாம்.
ரிஷபம்
தடைகள் காணப்படும். மனக் கவலை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை இன்றுஎடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். சாதகமான நாளாக இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.மகிழ்ச்சியைத் தக்கவைக்க குடும்பத்தினருடன் மனம் விட்டுபேசுவது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்
கடினமாக உழைப்பதன் மூலம்இன்றைய நாளை வெற்றி கரமானநாளாக மாற்றலாம். முக்கியமுடிவுகள் இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல்கடினமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். பண வரவுக்கு வாய்ப்புஉள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.
கடகம்
சுமாரான நாளாக இருக்கும். சௌகரியம் குறைந்து காணப்படும். வேலை சூழல்சவால் நிறைந்ததாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
சீரான நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் எதிர்பார்த்தது போன்று சாதகமாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல்நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
கன்னி
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல்சாதகமாக இருக்கும். திறமையாக செயல்பட்டு நிலுவையில் இருந்த வேலையையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதிநிலை சுமாராக இருக்கும். பயனுள்ள காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.
துலாம்
ஓரளவுக்கு அனுகூலமான நாளாகஇருக்கும். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். வேலைப் பளுஅதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவிஇடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
உற்சாகமான நாளாக இருக்கும்.ஆற்றல் மிகுந்துகாணப் படுவீர்கள். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். முதலீடு உள்ளிட்ட நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
தனுசு
கடினமான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணிபுரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். வேலையை செய்ய முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. மருத்துவ செலவு அதிகமாக இருக்கும்.
மகரம்
விருப்பங்கள் நிறைவேறும்நாளாக இருக்கும். எடுத்துவைக்கும் சிறு முயற்சிகளுக்குக்கூட சிறப்பான பலனைப்பெறுவீர்கள். வேலை, தொழில் சூழல் வாய்ப்பு நிறைந்ததாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையேஅன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
கும்பம்
சுமாரான நாளாக இருக்கும்.திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் இன்றைய நாளைஓரளவுக்கு சாதகமான நாளாகமாற்றலாம். வேலையில் தவறுகள்ஏற்படலாம். மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவுக்குச் சிறிதளவு வாய்ப்பு உள்ளது.பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
மீனம்
மந்தமான நாளாக இருக்கும். மனஅமைதி பெற ஆன்மிகம், தியானத்தில் ஈடுபடுவது நல்லது.வேலையில் நாட்டமின்மை அதிகரிக்கும். இதனால் வேலையை சரியாக செய்ய முடியாத சூழல் ஏற்படலாம்.குடும்பத்தில் அன்பு குறைந்துகாணப்படும். கணவன் மனைவிஇடையே மோதல் எற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை!