• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை அக்டோபர் 09, 2021

  • Share on

பிலவ வருடம் I புரட்டாசி 23 I சனிக்கிழமை I அக்டோபர் 9, 2021

மேஷம்

வெற்றிகரமான நாளாகஇருக்கும். நம்பிக்கைஅதிகரிக்கும். இன்றைய நாளைசாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வேலை சூழல் மகிழச்சியாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சி நிலவும். கணவன்மனைவி இடையே அன்புஅதிகரிக்கும். நிதி நிலைசாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

சுமுகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல்சாதகமாக இருக்கும். பொறுப்புடன் உங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு வலுப்படும். நிதி நிலை முன்னேற்றமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில்ஈடுபடுவது குழப்பங்கள் தீர மனஉறுதியை அளிக்கும். வேலைசூழல் சாதகமாக இருக்காது.வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம்ஏற்படலாம். நிதி நிலை சாதகமாகஇருக்காது. செலவுகள்அதிகரிக்கும்.

கடகம்

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். மனதில் நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளுஅதிகரிக்கும். குடும்பத்தில் உணர்ச்சிப் பெருக்கான சூழல்ஏற்படலாம். இதனால் கணவன்மனைவி இடையே நல்லிணக்கம்பாதிக்கப்படலாம். நிதி நிலைசுமாராக இருக்கும். பணஇழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும்.மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல்சாதகமாக இருக்கும். வேலைகாரணமாக வெளியூர் பயணம்மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் நேர்மையான அணுகு முறையை மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவிஇடையே புரிதல் காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும்.சிறிது சேமிக்கலாம்.

கன்னி

சாதகமான நாளாக இருக்காது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் கோபமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

துலாம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுது போக்கில் ஈடுபடுவது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.வேலை சூழல் சவால்நிறைந்ததாக இருக்கலாம். வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலைசுமாராக இருக்கும். வீண்செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

ஏற்ற இறக்கம் என எதுவும்பெரிதாக இல்லாத நாளாக இருக்கும். அமைதியாக இருப்பதன் மூலம் இன்றையநாளை சாதகமாக மாற்றலாம். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். பழைய வேலையைக்கூட முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன்மனைவி இடையே நல்லிணக்கம்அதிகரிக்கும். நிதி நிலைசாதகமாக இருக்கும். வரவுக்குஏற்ப செலவு இருக்கும்.

தனுசு

தொடர் முயற்சிகள் வெற்றியைப்பெற்றுத் தரும். எனவே, முயற்சியைக் கைவிட வேண்டாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவிஇடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். நன்மையான நாளாகஇருக்கும். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிநிலவும். கணவன் மனைவிஇடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலைசாதகமாக இருக்கும்.

கும்பம்

உற்சாகமான நாளாக இருக்க,எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல்சுமாராக இருக்கும். கவனக்குறைவு காரணமாக வேலையில்தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவுகாணப்படும். கணவன் மனைவிஇடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாகஇருக்காது. பண இழப்புக்குவாய்ப்பு உள்ளது.

மீனம்

கடினமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம், கவலை அதிகரிக்கும். வேலைப் பளுஅதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். அமைதியைத்தக்க வைக்க மனம் விட்டுப்பேசுவது நல்லது. நிதி நிலைசுமாராக இருக்கும். கடன் வாங்கிபற்றாக்குறையைச் சரி செய்யும்சூழல் ஏற்படலாம்.

  • Share on

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை அக்டோபர் 06, 2021

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை அக்டோபர் 11, 2021

  • Share on