• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை அக்டோபர் 06, 2021

  • Share on

பிலவ வருடம் I புரட்டாசி 20 I அக்டோபர் 6, 2021 I புதன்கிழமை

மேஷம்

சாதகமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் காணப்படும். உடன் பணிபுரிபவர்களுடனான நட்புறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக் கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

சுமுகமான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெற திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை சூழல் சுமாராக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் குறித்த நேரத்தில் வேலையை முடிக்கலாம். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். வருத்தம் அடையும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் அலைச்சல் காணப்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வீண் உணர்ச்சிகளை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்து வதை தவிர்க்க வேண்டும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

கடகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். முன்னேற்றம் காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

சாதகம் குறைவான நாளாக இருக்கும். என்ன நடந்தாலும் அதை லேசாக எடுத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது வேலையை முடிக்க உதவும். குடும்பத்தில் அமைதி நிலவ அன்புடன் நடந்துகொள்வது மிக முக்கியம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

கன்னி

அமைதி குறைவான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுது போக்கில் ஈடுபடுவது மன அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையை முடிக்க திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படாது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

துலாம்

கடினமாக உழைத்தால் இன்றைய நாளை சாதகமான நாளாக மாற்றலாம். அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் இன்றைய நாளை கழிக்க வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரித்து அதன் காரணமாக தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் நட்புறவு இருக்காது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதியைத் தக்க வைக்கலாம். செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இனிமையான நாளாக இருக்கும். சாதகமான பலன்களைக் காண்பீர்கள். வேலை சூழல் முன்னேற்றமானதாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத் தேவையை நிறைவேற்றச் செலவு செய்வீர்கள்.

தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். மற்றவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் புரிந்துணர்வு இருக்காது. கணவன் மனைவி இடையே சூடான விவாதம் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்

நன்மை, தீமை இரண்டும் கலந்த நாளாக இருக்கும். அமைதியாக நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு முன்னுரிமை அடிப்படையில் வேலையைப் பகுத்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு மேல் செலவு இருக்கும்.

மீனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

  • Share on

இன்றைய ராசி பலன் - செவ்வாய்கிழமை அக்டோபர் 05, 2021

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை அக்டோபர் 09, 2021

  • Share on