பிலவ வருடம் I புரட்டாசி 19 I செவ்வாய்கிழமை I அக்டோபர் 5, 2021
மேஷம்
சாதகமான நாளாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
மிதுனம்
மந்தமான நாளாக இருக்கும். சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் கூட அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் வேறுபாடு காணப்படும். மற்றவர்களுடன் பேசும் போது கூடுதல் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். பண இழப்பு ஏற்படலாம்.
கடகம்
சாதகமான நாளாக இருக்கும். விரும்பத்தக்க பலன்கள் வந்து சேரும். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
சுமாரான நாளாக இருக்கும். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைக்காக செலவுகள் செய்வீர்கள்.
கன்னி
கடினமான நாளாக இருக்கும். இன்றைய நாளை எதிர்கொள்ள திணறுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் இயல்பான அணுகுமுறை நல்லது. இதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் ஆரோக்கியமான உறவை பராமரிக்கலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.
துலாம்
சுமாரான நாளாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு அதிகரிக்கலாம். நிதி நிலை எதிர்பார்த்த வகையில் இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். மன அழுத்தம் காணப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியை பெற்றுத் தர உதவும். பொழுதுபோக்கில் ஈடுபடலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
தனுசு
சாதகமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் குவிப்பீர்கள். மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். கடன் வாங்கி தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். கடினமான சூழலை எதிர்கொள்ள, பொறுமையாக, நிதானமாக, சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தாமதங்கள் காணப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
கும்பம்
சுமாரான நாளாக இருக்கும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வேலை சூழல் மிதமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்காது. வேலையில் சிறு தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
மீனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதகமாக முடியும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.