பிலவ வருடம் I புரட்டாசி 15 I அக்டோபர் 1, 2021 I வெள்ளிக்கிழமை I
மேஷம்
கடினமான நாளாக இருக்கும். பொறுமை இழந்துவிடாமல் செயல்பட வேண்டும். இலக்குகளை எளிதாக அடைய முடியாது. வேலை சூழல் திருப்திகரமாக இருக்காது. குடும்பத்தில் நட்புறவு இருக்காது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
உற்சாகமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எதிர்கொள்வது நல்லது. நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையில் விடமுயற் சியுடன் சாதித்துக் காட்டுவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
சாதகமான நாளாக இருக்காது. மந்தமான நாளாக இருக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். கவனத்துடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதி யின்மை நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பண இழப்புக்கு சற்று வாய்ப்பு உள்ளது.
கடகம்
சாதகமான நாளாக இருக்கும். இலக்குகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். வேலையை சிறப்பாக செய்வீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
வளமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சித்தால் வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக் கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம்.
கன்னி
கடினமான நாளாக இருக்கும். மனதில் கவலை, பாதுகாப்பின்மை போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புக்கள் தேடி வரும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு நிலை பாதிக்கப்படலாம். பணப் பற்றாக்குறை ஏற்படும்.
துலாம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். இருப்பினும் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கலாம். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள காரியங்களுக் கு செலவு செய்வீர்கள்.
தனுசு
அலைச்சல் காணப்படும். பதற்றத்துக்கு இடம் அளிக்காமல் நிதானத்துடன் எதையும் அணுக வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே இடைவெளி அதிகரிப்பதைத் தவிர்க்க விட்டுக்கொடுப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலை கவலையை ஏற்படுத்தும்.
மகரம்
சுமாரான நாளாக இருக்கும். எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. வேலை சூழல் சற்று கடினமாக இருக்கலாம். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். உங்களின் அதீத உணர்ச்சி பெருக்கு காரணமாக குடும்பத்தில் இனிமையான சூழல் பாதிக்கப் படலாம். மனம் திறந்து பேசுவது நல்லது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
கும்பம்
அனுகூலமான நாளாக இருக்காது. எனவே, எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் விரும்பத்தகாததாக இருக்கும். உடன் பணி புரிபவர்க ளுடன் வீண் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்கள். செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும்.
மீனம்
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திறம்படச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.