மேஷம்
இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மனக் கவலை ஏற்படலாம். முயற்சிகளில்தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை.
ரிஷபம்
இன்று உடனிருப்பவர்களுடன் சிறு சிறுமனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.வாக்குவாதங்களைத் தவிர்த்துசாதுர்யமாக கையாள்வது நல்லது.வரவேண்டிய பணம் வந்து சேரும்.அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாகவரவேண்டி இருந்த பணம் வந்து சேரும்.
மிதுனம்
இன்று உங்கள் பணிகளில் பலகுறுக்கீடுகள் வந்தாலும் அதைசாமர்த்தியாமாக சமாளித்து வெற்றிகாண்பீர்கள். மாணவர்கள் மிகவும்கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பதுநல்லது. விளையாட்டு போட்டிகளில்ஈடுபடும் போது கவனம் தேவை.
கடகம்
இன்று காரிய அனுகூலம் உண்டாகும்.குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணவரத்துஅதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்.அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
சிம்மம்
இன்று வாடிக்கையாளர் களிடம்சாமர்த்தியமாக பேசுவதன் மூலம்வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.
கன்னி
இன்று வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.குடும்பத்தில் வாக்குவாதத்தையும்,கோபத்தையும் தவிர்ப்பது நல்லது.வாழ்க்கை துணையுடன் அனுசரித்துசெல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.
துலாம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்துமுடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டிஇருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பதுநல்லது. வாய்ப்புகள் தேடிவரும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்தவாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று பண வரவு திருப்தி தரும்.எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்துசேரும். சிலர் மேலிடத்தின் நேரடிஅங்கீகார த்தைப் பெறுவர். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வதுநன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல்கவனம் நன்மை தரும்.
தனுசு
இன்று கடன் பிரச்சனை குறையும்.கல்வியில் வெற்றி கிடைக்கும். நினைத்தகாரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மைஉண்டாகும். எதையும் மனோதைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடுதொடர்பான பணிகள் விரைந்து நடக்கும்.
மகரம்
இன்று நெருக்கடியான நேரத்தில்எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும்.தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர் களுக்கு கீழ்நிலையில் உள்ளவர் களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப் பார்கள்.
கும்பம்
இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமானசூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலைகாணப்படும். கணவன்மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.பிள்ளைகள் உங்களது வார்த்தை களுக்குமதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும்.
மீனம்
இன்று எதிலும் மிகவும் கவனமாகஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல்வாங்கலில் எச்சரிக்கை தேவை.மாணவர்கள் பாடங்களில் சந்தேகம்கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.