பிலவ வருடம் I புரட்டாசி 11 I திங்கட்கிழமை I செப்டம்பர் 27, 2021
மேஷம்
சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை மகிழ்ச்சியா னதாக மாற்றலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சிறப்பான முறையில் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். ஓரளவுக்குச் சேமிக்கலாம்.
ரிஷபம்
விட்டுக்கொடுத்துச் செயல் படுவதன் மூலம் இன்றைய நாள் சாதகமானதாக மாறும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கலாம். தவறுகள் ஏற்படாமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் அமைதியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்படலாம்.
மிதுனம்
யதார்த்தமான அணுகுமுறை மிகவும் முக்கியம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். இருப்பி னும் சரியான முறையில் வேலை யை முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வீண் பேச்சுக்க ளைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
அமைதியான சௌகரியமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத்தைச் சேமிக்கும் சூழல் ஏற்படும்.
சிம்மம்
சிறப்பான நாளாக இருக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். எண்ணங் கள் நிறைவேறும். வேலை சூழல் சுமாராக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பயனுள்ள காரியங்க ளுக்கு செலவு செய்வீர்கள்.
கன்னி
மகிழ்ச்சியான ஆற்றல் மிக்க நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது தாமதங்களைத் தவிர்க்க உதவும். குடும்பத்தில் ஈகோ பிரச்னை எழலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக் கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்
சுமாரான நாளாக இருக்கும். மன அமைதி பெற ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். பொறுப்புக்கள் சுமையாக வந்து சேரும். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
விருச்சிகம்
துடிப்பான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தேடி வரும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். முயற்சிகள் செய்து கடின வேலையையும் முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
தனுசு
எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கலாம். அணுகுமுறையில் மாற்றம் செய்வது நல்லது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். வேலையில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். கடின முயற்சிகள் வெற்றி பெறும்.
மகரம்
பயன்கள் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங் களைத் தவிர்ப்பது வெற்றிக்கு உதவும். வேலைப் பளு அதிகரிக் கும். இருப்பினும் முயற்சி செய்து சரியான நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுப்பது அதிகரிக்கும். நிதி நிலை கடினமாக இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.
கும்பம்
மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். சாதகமான நாளாக இருக்க அமைதி காப்பது அவசியம். வேலை சூழல் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே அமைதியாக இருப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்பு ஏற்படலாம்.
மீனம்
இனிமையான நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வரும். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.