• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை செப்டம்பர் 25, 2021

  • Share on

பிலவ வருடம் I புரட்டாசி 9 I சனிக்கிழமை I செப்டம்பர் 25, 2021

மேஷம்

கடுமையான நாளாக இருக்கும். உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக்கொள்வது இலக்கை நோக்கிய பயணம் வெற்றி பெற உதவும். வேலை சூழல் இறுக்கமாக இருக்கும். குடும்பத்தில் பதற்றமான உணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

ரிஷபம்

ஓரளவுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதி யைத் தரும். வேலை சூழல் சுமாராக இருக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். நாள் முழுக்க மகிழ்ச்சி யாகவும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். அதீத உற்சாகம் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு காணப்படும். பண வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்பு உள்ளது.

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மன அமைதியைத் தரும். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பொழுதுபோக்கில் ஈடுபடுவது மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கவனத்துடன் குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். மனதில் பயம், பதற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. அணுகுமுறையில் மாற்றம் தேவை. குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றியைப் பெறலாம். மன அமைதிக்கு ஆன்மிக காரியங் களில் ஈடுபடுவது நல்லது. வேலை சூழல் சுமுகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத் தில் அமைதி நிலவும். அமைதி மற்றும் நல்லுறவு நீடிக்க அனுசரி த்து நடப்பது அவசியம். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். சவால்களைச் சந்திக்க நேரிடலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வளர்ச்சிப் பாதையில் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

தனுசு

இன்றைய நாள் சாதகமானதாக அமையத் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் செயல்பட வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.

மகரம்

மந்தமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான நாளாக மாற்றலாம். வேலையில் பதற்றமான சூழல் காணப்படும். பணிச் சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

கும்பம்

அதிருப்தியான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, திருப்தியற்ற நிலை காணப்படும். வேலையில் தடைகள் காணப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

மீனம்

சாதகமான நாளாக இருக்கும். காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.

  • Share on

அன்னை தமிழில் அர்ச்சனை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தொடங்கியது!

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை செப்டம்பர் 27, 2021

  • Share on