• vilasalnews@gmail.com

அன்னை தமிழில் அர்ச்சனை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தொடங்கியது!

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கியது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோயில் நிலங்கள் கையகப்படுத்துதல், நிலங்களின் விவரங்கள் குறித்து இணையத்தில் பதிவேற்றம் செய்தல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அன்னைத் தமிழில் அர்ச்சனை என பல்வேறு நடவடிக்கைகளை திட்டங்களை அறிவித்து வருகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கியது

அந்த வகையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழ் அர்ச்சனை செய்ய விருக்கும் ஆட்சியாளர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதல்நிலை கோயில்களின் அர்ச்சகர்கள் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அத்துடன் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் படிப்படியாக தமிழ் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கியது; கோயில் இணை ஆணையர் அன்புமணி முன்னிலையில் அர்ச்சகர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்தனர்.

  • Share on

இன்றைய ராசி பலன் - செவ்வாய்கிழமை ஆகஸ்ட் 24, 2021

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை செப்டம்பர் 25, 2021

  • Share on