பிலவ வருடம் I ஆவணி 8 I செவ்வாய்கிழமை I ஆகஸ்ட் 24, 2021
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நினைத்தது நடக்கும் நன்னாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழிலாளர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்ப வர்கள் விஷயங்களில் மேல் அதிகாரி களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடு ப்பது நல்லது. புகழ் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு சந்தர்ப்பங்களும் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். சுய தொழிலில் இருப்பவர்கள் தங்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். இட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். திறமைக்கு மதிப்பு கொடுக்கப்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இன்று எதிலும் மற்றவர்கள் வியக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறும். உத்தியகத்தில் இருப்பவர்களுக்கு வெளிவட்டார பழக்க வழக்கங்களில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். வேண்டிய பழைய பாக்கிகள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூர்யமாக செயல்பட்டு பலன்களை பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனக் குறைவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது உத்தமம். குடும்பத்தில் கணவன்-மனைவி பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனத்து டன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோச னை செய்துவிட்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்க ளுக்கு அதிகம் பொறுமை தேவைப் படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு இன்முகத்துடன் நடந்து கொள்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் அமைதி நிலவும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மனைவி பிரச்சனைகளுக்கு இடையே மூன்று மனிதர்களை வர விடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய மன நிலை சிறப்பாக இருக்கும். தெளிவான முடிவு எடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இன்றைய நாள் எதையும் தன்னம்பிக் கையுடன் செய்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். உங்களை மேலும் மெருகேற்ற பல விஷயங்களில் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவை களை அறிந்து பூர்த்தி செய்யக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுபச் செய்திகள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய இனிய நாள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் வாய்ப்பு பெற அமைதி தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்க்கும் சவால்களை முறியடித்து காட்டும் தைரியம் பிறக்கும். குடும்பத்தில் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிக ளுடன் இணக்கம் ஏற்படும். உங்கள் கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். தெய்வீக சிந்தனை மேம்பட்டு காணப்படும். புதிய சொத்துக் கள் வாங்கும் முயற்சியில் சற்று முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த சண்டைகள் தீரும். புது பொலிவுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் தள்ளி சென்ற சில விஷயங்கள் உங்களை தேடி தானாகவே வந்து சேரும். இழந்த உரிமையை மீட்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் மேம்பட கவனத்துடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். மனம் ஒருமுகப்படுத்த கூடிய வகையில் தியானம்,யோகா போன்றவற்றில் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிடைக்கும். தடைகள் அனைத்தும் நீங்கும் நல்ல நாளாக இருக்கும்.