பிலவ வருடம் I ஆவணி 7 I திங்கட்கிழமை I ஆகஸ்ட் 23, 2021
மேஷம்
சிறப்பான நாளாக இருக்கும். லட்சியங்கள் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமுகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ரிஷபம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் இருப்பவர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
ஓரளவுக்கு சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. வேலை கடுமையாக இருக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
சுமாரான நாளாக இருக்கும். முரண்பட்டு நிற்காமல் விட்டுக்கொடுத்து, அனுசரித்து செல்வது நல்லது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை சாதமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலையை விரைவாக, சிறப்பாக செய்வீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
கன்னி
சாதகமான சூழல் காணப்படும். உற்சாகம் அதிகரிக்கும். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சீரூக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
துலாம்
மந்தமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத கடின சூழல் ஏற்படலாம். வார்த்தை பிரயோகம் காரணமாக குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப் படலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். சவாலான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைக்க முயற்சிக்க வேண்டும். வாழ்க்கைத் துணைவருடன் அமைதியி ன்மையை வெளிப்படுத்த வேண்டாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.
தனுசு
நன்மை விளையும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். நேர்மையுடன் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
மகரம்
சீரான நாளாக இருக்கும். விவேகத்துடன் செயல்படுங்கள். வேலை சூழல் சுமாராக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம்
தடைகள் நிறைந்து காணப்படும். மன வருத்தம், பதற்றம் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் ஏமாற்றமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு பாதிக்கப்படலாம். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
மீனம்
ஓரளவுக்கு மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். மனதில் ஏற்படும் பதற்றம், பயம் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்யலாம். வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகளும் அதிகரிக்கும்.