பிலவ வருடம் I ஆவணி 5 I சனிக்கிழமை I ஆகஸ்ட் 21, 2021
மேஷம்
சாதகமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். மன தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுமூகமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.
ரிஷபம்
சுமாரான நாளாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்
இலக்குகளை திட்டமிட்டு அடைய சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் சற்று விலகியே இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படுவதை கண்காணிக்க வேண்டும்.
கடகம்
அனுகூலமான நாளாக இருக்கும். புத்துணர்வுடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடைபெறும். உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு, நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். கடன் வகையில் பண வரவு காணப்படும்.
கன்னி
சுமாரான நாளாக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பதற்றம் இன்றி மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.
துலாம்
சிறப்பான நாளாக இருக்க திட்டமிட்டு செயல்படுவது அவசியம். நிதானத்தை இழக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலைப் பளு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. வீண் செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். அதற்கு சிறிது முயற்சியாவது செய்வது அவசியம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு
மகிழ்ச்சியான நாளாக இருக்காது. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சாதகமாக மாற்றலாம். வேலை சூழல் மந்தமாக இருக்கும். கூடுதல் பொறுப்புக்கள் சுமையாக வந்து சேரும். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் பேசும் போது கவனம் தேவை. சின்ன விஷயம் கூட பெரிதாக மாறி சண்டையை ஏற்படுத்தலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகளை கட்டுப்படுத்த திணறுவீர்கள்.
மகரம்
சுமாரான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் கைகொடுக்காது. எனவே, கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும். வேலை சூழல் பிரச்னைக்குரியதாக மாறலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் இனிய சூழல் இருக்காது. வாழ்க்கைத் துணைவருடன் உறவு நிலையை சகஜமாக பராமரிக்க மனம் விட்டு பேசுவது நல்லது. நிதி நிலை எதிர்பார்த்தது போல் இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
கும்பம்
கடினமான நாளாக இருக்கும். வெற்றி பெற கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். மனதில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். குடும்பத்தில் சூடான விவாதங்கள் எழலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நிதி நிலை பாதிப்பாக அமையும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
மீனம்
அனுகூலமான நாளாக இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் பயனுள்ளதாக இருக்கும். திறமைக்கு ஏற்ப உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.