பிலவ வருடம் I ஆவணி 1 I செவ்வாய்கிழமை I ஆகஸ்ட் 17, 2021
மேஷம்
திட்டமிட்டு, கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. எளிதில் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். இது கணவன் மனைவி இடையே உறவுநிலை பாதிப்படையச் செய்யும். நிதி நிலை சாதகமாக இருக்காது. சிறிதளவு பண வரவு நிகழலாம்.
ரிஷபம்
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் வெற்றி பெறுவீர்கள். திறமைகள் அங்கீகரிக்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
மிதுனம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழில் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கடகம்
கவனத்துடன் இருக்க வேண்டிய நாள் இன்று. மனதில் வீண் சிந்தனைகள் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். மனக் குழப்பம் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலும் வரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். புரிந்துணர்வு பாதிக்கப்படும். செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்
மந்தமான நாளாக இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். இதைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். கஷ்டப்பட்டு வேலை செய்வீர்கள்… இருப்பினும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் மனக் குழப்பம் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணத்தை இழக்க வாய்ப்புள்ளது.
கன்னி
அனுகூலமான நாளாக இருக்கும். இன்றைய தினத்தை உங்களின் செயல்கள் மூலம் சிறப்பானதாக மாற்றுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். விரைவாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.
துலாம்
இலக்குகள் மீது கவனம் செலுத்தி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மன அமைதியின்மை காணப்படும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் நட்புறவான சூழல் இருக்காது. அனுசரித்து செல்வதன் மூலம் அமைதியைத் தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சாதகமான நாளாக இருக்காது. சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காணப்படும். இதனால் கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
சுமாரான நாளாக இருக்கும். முன்னேற்றம் தொடர்பான கவலை அதிகரிக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.
மகரம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கும்பம்
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தேடி வரும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மீனம்
ஏற்ற இறக்கம் எதுவும் இல்லாத சமமான நாளாக இருக்கும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. அமைதியாகக் கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க முயல்வது நல்லது. குடும்பத்தினர் மத்தியில் அதீத உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்த வேண்டாம். இது உறவு நிலையைப் பாதிப்படைய செய்யலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். சிறிதளவுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.