பிலவ வருடம் I ஆடி 28 I வெள்ளிக்கிழமை I ஆகஸ்ட் 13, 2021
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களை சுற்றியுள்ளவர்களை இனம் கண்டு கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆலோசனை கேட்டு முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் தேவைகளை அறிந்து நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர் களுக்கு தீராத கடன் பிரச்சனை தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோக த்தில் இருப்பவர்களுக்கு தள்ளி சென்ற தடைபட்ட காரியங்கள் கூட நிறை வேறும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் நினைத்த சவால்களை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான நாளாக அமைய இருக்கிறது. வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பெண்கள் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை யை உயர்த்திக் கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்டு செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நினைத்ததை சாதிக்கும் நாள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி உற்சாக மடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்காத சில மாற்றங்கள் நிகழும். வெளிவட்டார இடங்களில் பயணங் களின் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினருடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப காரியங்களுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் அமையும். தடைபட்ட முயற்சிகள் மீண்டும் எடுத்து செய்யக்கூடிய திட்டமிடல் இருக்கும். சுய தொழிலில் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத் தில் இருப்பவர்கள் கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கும். சுயதொழிலில் இருப்பவர்கள் தேவையற்ற நபர்களின் அறிமுகத்தைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்பட உணவு கட்டுப்பாடு தேவை.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்ட கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வாக்குறுதிகளை காப்பாற்ற முற்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாளாக இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.