• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை ஆகஸ்ட் 12, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆடி 27 I வியாழக்கிழமை I ஆகஸ்ட் 12, 2021

மேஷம்

உற்சாகமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை தொழிலில் அங்கீகாரம் கிடைக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இன்றைய நாளை சாதகமான நாளாக மாற்றலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்காது. கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு வளர நட்புறவைப் பராமரியுங்கள். செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

வெற்றிகரமான நாளாக அமையும். அதற்கு கொஞ்சம் முயற்சி செய்வது அவசியம். வேலை சூழல் சிறப்பாக இருக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். நேரத்தை நிர்வகிக்க வேண்டும். குடும்பத்தில் இணக்கமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்

சிறப்பான நாளாக இருக்கும். உற்சாகமான மனநிலை இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். ஆன்மிக காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

சிம்மம்

பொறுமையாக இன்றைய நாளை கடக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நேர்மறை எண்ணத்துடன் செயல்படும்போது அமைதி குறைவு பிரச்னை நீங்கும். கணவன் மனைவி இடையே நட்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் ஏற்படும்.

கன்னி

தடைகள் காணப்படும். மனம் தளராமல் நம்பிக்கையுடன் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். தேவையான விஷயமாக பார்த்து செலவு செய்வது நல்லது.

துலாம்

திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியைத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக்குறைவு அதிகரிக்கும். இதனால் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறைவு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கூடுதல் கவனத்துடன் இருந்தால் செலவைக் கட்டுப்படுத்தலாம்.

விருச்சிகம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தடைகளை சவால்களை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

தனுசு

சீரான நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். வெளியிடங் களுக்குச் சென்று வருவீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இது உங்களின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் காரணமாக வேலை சூழல் கவலைக்குரியதாக மாறும். வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

கும்பம்

சுய முயற்சி இன்றைய நாளை சிறப்பானதாக மாற்ற உதவும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சிறப்பாக இருக்க அணுகு முறையில் மாற்றங்கள் தேவை. உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை பராமரிக்க வேண்டும். குடும்பத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இது வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியை ஏற்படுத்த உதவும். நிதி நிலை விரும்பிய படி இருக்காது. சிலருக்கு ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மீனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவீர்கள். மனத் தெளிவு காணப்படும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையை எளிதாக செய்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். தேவையைச் சமாளிக்கக் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

  • Share on

இன்றைய ராசி பலன் - செவ்வாய்கிழமை ஆகஸ்ட் 10, 2021

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 13, 2021

  • Share on