பிலவ வருடம் I ஆடி 25 I செவ்வாய்கிழமை I ஆகஸ்ட் 10, 2021
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளி இடங்களில் புதிய நட்பை வளர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் உளைச்சல் இருக்கும். பெண்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். பொருளாதாரம் மேம்படும். சிந்தித்து செயல்படும் நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியுடன் இணக்கம் ஏற்படும். உத்தியோக நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு தன்னம்பிக்கை வளரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நினைத்தது நடக்கும் நாள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றியை காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் அவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் என்றுமில்லாத அளவிற்கு என்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். இனிய நாளாக இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு இருக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். பெண்களுக்கு புதிய பொருள் வாங்கும் யோகம் உண்டு. பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்கவலைகள் அகன்று புது பொலிவுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் துயரங்கள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் அனுசரணையாக செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் நேரத்தை விரயம் ஆகாமல் இருப்பது உத்தமம். பெண்களுக்கு காலம் கடந்து சில தெளிவுகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் நாள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடந்த கால நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற விஷயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பெண்களுக்கு நிம்மதி இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். வாடிக்கையாளர்கள் நன்மதிப்பு பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். பெண்களுக்கு அறிவு வளரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கவலைகள் நீங்கி படிப்படியான முன்னேற்றம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் ஆரோக்கியமான போட்டி நிலவும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பயணங்களின் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பெண்க ளுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களுடைய மனதை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புதிய புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் தொகை கைக்கு வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று நடக்க வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமைய இருக்கிறது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது உத்தமம். பெண்களுக்கு இனிய நாளாக இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும். பெண்கள் புதிய சாதனை படைப்பீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.