பிலவ வருடம் I ஆடி 24 I திங்கட்கிழமை I ஆகஸ்ட் 9, 2021
மேஷம்
கடினமான நாளாக இருக்கும். மன உளைச்சல் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாது. குடும்பத்தில் அகந்தை போக்கு காணப்படும். இதைத் தவிர்ப்பது வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்க உதவும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். திருப்திகரமாக வேலையை முடிப்பீர்கள். மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
மிதுனம்
சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் உங்கள் மீது சுமத்தப்படலாம். குடும்பத்தில் வருத்தமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதியின்மை ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
எதிர்காலத்தைத் திட்டமிட்டு செயல்பட இன்றைய தினம் சிறப்பானதாக உள்ளது. வீண் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நிதானமாகச் செயல்படுங்கள். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் முரண்பாடு காணப்படும். கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்படலாம். நிதி நிலை கடினமாக இருக்கும். பணப் புழக்கம் சாதகமாக இல்லை.
சிம்மம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்காது. உழைப்பின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட வேண்டும். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் தவறுகளால் பிரச்னை ஏற்படலாம். இதைத் தவிர்க்க வெளிப்படையாக பேசுவது நல்லது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது. செலவு செய்வதற்கு முன்பு யோசிப்பது நல்லது.
கன்னி
உற்சாகமான நாளாக இருக்கும். வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்வீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
துலாம்
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையை முழு மனதுடன் திருப்திகரமான செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். இதனால் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளிப்பது குடும்பத்தில் அமைதியைத் தக்க வைக்க உதவும். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
அசௌகரியமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது ஆறுதலைத் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். அமைதியாக இருப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைக்க உதவும். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
மகரம்
மகிழ்ச்சியான, உற்சாகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்தான். புத்துணர்வுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணைவருடன் கலந்தாலோசனை செய்யுங்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
கும்பம்
சிறப்பான நாளாக இருக்கும். முன்னேற்றத்துக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வேலை சூழல் முன்னேற்றம் அளிக்கும் வகையில் இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முன்கூட்டியே முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். தேவையை நிறைவேற்றும் அளவுக்கு நிதி நிலை காணப்படும்.
மீனம்
நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். நன்மை, தீமை கலந்து காணப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியை அளிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது உதவியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்வது குடும்பத்தில் அமைதியைத் தக்க வைக்க உதவும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு, பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.