• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 6, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆடி 21 I வெள்ளிக்கிழமை I ஆகஸ்ட் 6, 2021

மேஷம் 

சாதகமான நாளாக இருக்காது. தாமதங்கள் காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. பணிச் சுமை அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க திட்டமிட்டுச் செயல்பட வேண்டியது முக்கியம். குடும்பத்தில் திருப்தியில்லாத சூழல் காணப்படும். வாழ்க்கைத் துணை வருடன் இனிமையாக பேசுவதன் மூலம் நிலையை சீராக்கலாம். பண வரவு காணப்பட்டாலும் தேவையற்ற செலவுகள் காணப்படும்.

ரிஷபம்

அமைதியான நாளாக இருக்கும். சௌகரியமான சூழல் காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்சாகமான சூழல் காணப்படும். வாழ்க்கைத் துணை வருடன் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நிதி நிலை திருப்திரகமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். மகிழ்ச் சியான தருணங்கள் வருதவற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மனக் குழப்பம் அதிகரிக்கும். வேலை சூழல் வளர்ச்சி குறைந்து காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் சிக்கலான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

கடகம்

மகிழ்ச்சி குறைந்து காணப்படும். தன்னம்பிக்கை, புத்திசாலித்தனத்தை அதிகரித்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப் படலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது. நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

சிறப்பான திருப்திகரமான நாளாக அமைய மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைத்திருப்பது அவசியம். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் அலசி ஆராய்ந்து திட்டமிட்டு செயல்படுத்துங்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். வாழ்க்கைத் துணைவரின் தேவையை நிறைவேற்ற முயற்சி செய்வது நல்லது. பணப் புழக்கம் சாதகமாக இருக்காது.

கன்னி

சாதகமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் வளர்ச்சி மிகுந்ததாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

துலாம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனத்தில் உற்சாகம் அதிகரிக்கும். அதீத உற்சாகத்தை கட்டுப்படுத்துவது நல்லது. முக்கிய முடிவுகளை அதீத உற்சாக மனநிலையில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்

மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக அமைய உதவும். எதிலும் யதார்த்தமான அணுகுமுறையைப் பின்பற்றுங்கள். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவ அன்பை வெளிப்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். பணத் தேவை அதிகரிக்கும்.

தனுசு

மனக் கவலை அதிகரிக்கும். மனதை அமைதியாக வைத்திருக்க ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். எதையும் முடிக்க முடியாமல் திணறு வீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

மகரம்

ஆற்றல் மிகுந்து காணப்படும். வெற்றி பெற மன உறுதியை அதிகரிக்க வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். இருப்பினும் வெற்றியைப் பெற சற்று கடின உழைப்பை வெளிப் படுத்த வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

கும்பம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். முதலீட்டுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

மீனம்

சுமாரான நாளாக இருக்கும். மனதுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பிரார்த்தனை, பொழுதுபோக்கில் ஈடுபடலாம். வேலை சூழல் பதற்றமாக காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் அன்புடன் பழகுவதன் மூலம் குடும்பத்தில் அமைதியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

  • Share on

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை ஆகஸ்ட் 5, 2021

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை ஆகஸ்ட் 9, 2021

  • Share on