• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை ஆகஸ்ட் 5, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆடி 20 Iவியாழக்கிழமை I ஆகஸ்ட் 5, 2021

மேஷம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தாரால் பிரச்னை வந்து தீரும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தின் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

கடகம்

எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியம் தாமதமாக முடியும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டி வரும்.

சிம்மம்

முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழும் நாள். பணியாளர் களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தாய்வழி ஆதரவு உண்டு. வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வரவு திருப்தி தரும். நண்பர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உடல்நிலை மேம்படும். தாயின் உடல் நலம் சீராகும். நல்லவர்களின் அறிமுகத்தால் நன்மையுண்டு. மனதில் நிதானமும் அமைதியும் ஏற்படும். உறவினர் வருகை இருக்கும்.

கன்னி

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் செய்தி யொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இடம், பூமி வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். சாதுர்ய பேச்சால் மற்றவர்களைக் குழப்பாமல் இருப்பது நல்லது.பேச்சிலும் செயலிலும் முழுமையான நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

துலாம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் உருவாகலாம். நம்பிக்கையோடு செயல்படுங்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். இழந்த பொருள் கிடைக்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் சேரும். புதிய வகையில் முயற்சித்து தோல்வியை வெற்றியாக்குவீர்கள்.

விருச்சிகம்

யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டியநாள். வேலைப்பளு கூடும். குடும்ப உறுப்பினர்கள் நீங்கள் செய்யும் செயலில் குறை கூறலாம். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வயதிலும் அனுபவத்திலும் சிறந்தவர்களால் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்களைக் கேலியாகப் பேசிக் கோபத்துக்கு ஆளாகாதீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பீர்கள். நெருங்கிய உறவினர் உதவுவர்.

தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். வேலை, தொழில் சூழல் மகிழ்ச்சியை அளிக்கும். நடப்பவை எல்லாம் நல்லதாகவே அமையும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அனுசரனையான சூழல் காணப்படும். செலவுக்கு ஏற்ப போதுமான பணம் கையிருப்பில் இருக்கும்.

மகரம்

சிறப்பான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் குவிக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். முழு திறமையை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.  நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம் 

இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மூன்றாம் நபர்களை நம்பி குடும்ப விஷயங்களை பகிர்ந்து  கொள்வதை தவிர்ப்பது உத்தமம். சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மேல் அதிகாரிகள் மூலம் சில நுட்பங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மீனம்

இன்றைய நாள் புது உற்சாகம் பிறக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பகைகளை எதிர்த்து போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.

  • Share on

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை ஆகஸ்ட் 4, 2021

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 6, 2021

  • Share on