• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை ஆகஸ்ட் 4, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆடி 19 Iபுதன்கிழமை I ஆகஸ்ட் 4, 2021

மேஷம்

வாய்ப்புகள் வாயிற் கதவைத்தட்டும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும். உடனிருப்பவர்களினால் ஏற்பட்ட உபத்திரங்கள் விலகும். குடும்பத்தினர் உங்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பர். முன்வினைப் பாவம் தீர நற்செயல்கள் செய்வீர்கள். குழந்தைகளின் முயற்சி பலிக்கும். உடல்நிலை மேம்படும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும்.

ரிஷபம் 

உத்தியோக முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும். உறவினர் வழியில் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. சமூக மதிப்பு கூடும் யோசனையுடன் செயல்பட்டு வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். கண்ணியமாக செயல்பட்டு நல்லவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம்

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். பெரியவர்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். உடல் நலம் சீராகும். மனதில் இருந்த கவலை தீரும். நண்பர்களால் உதவி உண்டு. அலைச்சல், வீண் செலவுகள் இருக்கும். குடும்பத்தில் டென்ஷன் வரும். வீண் பயம் நீங்கும். போராடி வாழ்வில் நன்மை காண்பீர்கள்.

கடகம்

சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர் வழியில் உதவிகள் கிடைக்கலாம். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். வலிய வரும் பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காண்பீர்கள்.மனதில் மகிழ்ச்சி நிலவும். விட்டு கொடுத்து நற்பெயர் பெறுவீர்கள். நற்செயல்கள் காரணமாக மதிப்பும், மரியாதையும் கூடும்.

சிம்மம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய   பணத்தை  போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.

விருச்சிகம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் நாள்.

தனுசு

இன்றைய நாள் சாதகம் ஆவதும், சுமாராக மாறுவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது. பணியிடச் சூழல் கடினமானதாக இருக்கும். தடைகளை சவால்களை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே சுமூக உறவு இருக்காது. நிதிநிலை கவலையளிப்பதாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும்.

மகரம்

இன்று உங்களிடம் தைரியமும் உறுதியும் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் காணப்படும். துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் அன்பு நிறைந்து காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற நாள். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்

இன்று அமைதியாக அனுசரணையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். வேலை சூழல் கடினமாக காணப்படும். வேலையில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் சுமுக உறவு காணப்படாது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக இருக்கும்.

மீனம்

இன்று சிக்கலான சூழ்நிலை காணப்படும். இதை எதிர்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். விரைந்து பணிகளை முடிக்க உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அகந்தைப் போக்கும் பிடிவாதமும் குடும்பத்தில் நல்லிணக்கத்தைப் பாதிக்கும். சூழ்நிலைக்கேற்ப நீங்கள் உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நிதி நிலை சாதகமாக இருக்காது. அதிக செலவு ஏற்படலாம்.

  • Share on

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை ஆகஸ்ட் 2, 2021

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை ஆகஸ்ட் 5, 2021

  • Share on