• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை ஆகஸ்ட் 2, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆடி 17 I திங்கட்கிழமை I ஆகஸ்ட் 2, 2021

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடைவதில் கால தாமதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார விருத்தி பெற கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். பொருளாதார ரீதியாக விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

ரிஷபம் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கனவுகள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காலம் கடந்து சில விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க எச்சரிக்கை தேவை. 

மிதுனம் 

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதில் கால தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். ஆரோக்கியம் சீராகி வரும். 

கடகம் 

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமை, கண்ணியம் என்று செயல்படுபவர்களுக்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி உண்டாக கூடுதல் முயற்சி எடுப்பீர்கள். புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் மேம்படும். 

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மூலமான வரை அக்கறை செலுத்துவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபார விருத்தி பெற பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். 

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் கடமைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறும் யோகமுண்டு. ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சாதக பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் அந்த நிலை மாற முயற்சி செய்வீர்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி காண்பீர்கள். 

துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் மறந்து செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைக்கும் சில விஷயங்களுக்கு வெற்றி கிடைக்க கூடிய அற்புத பலன் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி மறையும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். 

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடனிருப்பவர்களே துரோகம் செய்ய முற்படலாம் எனவே எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை செலுத்துங்கள். 

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றியை காண கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடி வரும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரும் என்பதால் கவனம் தேவை. 

மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுப்பதில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ கவனம் செலுத்துங்கள். கொடுத்த பணம் வசூல் ஆகக் கூடிய வாய்ப்புகள் அமையும் பொழுது அதனை அலட்சியப் படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு இருக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப்பலன் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். 

கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விருத்தி உண்டாக கூடுதல் உத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். ஆரோக்கியம் சீராகும். 

மீனம் 

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்றே நடக்கும். சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை வெளியிட பயணங்களின் போது கவனம் செலுத்துங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். கணவன் மனைவி உறவில் சிக்கல் தீரும். குடும்பத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் பணிச்சுமை ஏற்படும். 

  • Share on

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை ஜூலை 30, 2021

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை ஆகஸ்ட் 4, 2021

  • Share on