பிலவ வருடம் I ஆடி 14 I வெள்ளிக்கிழமை I ஜூலை 30, 2021
மேஷம்
இன்றைய தினம் நிதானம் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். மற்றவர்களுடன் பேசும் போது மிகவும் கவமான வார்த்தை களைப் பயன்படுத்துங்கள். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டால் விரைவாக முடிக்கலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப் படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
ரிஷபம்
இனிமையான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே இனிமையான சூழல் காணப்படும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். நன்மைகள் நிறைந்து காணப்படும். வேலை சூழல் வளர்ச்சியானதாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி, புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு உயரும்.
கடகம்
சவாலான நாளாக இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். மற்றவர்களுடன் நட்புறவுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவ இனிமையாக பேசுங்கள். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது.
சிம்மம்
சாதகமான நாளாக இருக்காது. நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் நேர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும்.
கன்னி
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
துலாம்
உற்சாகமான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வரும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வும் உறவில் பிணைப்பும் ஏற்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். கருத்து வேறுபாட்டைப் போக்க முயற்சிப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
சிறப்பான நாளாக இருக்காது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது ஆறுதலைத் தரும். வேலை சூழல் சிரமமாக இருக்கும். வேலையில் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். குடும்பத்தில் சாதகமான சூழல் இருக்காது. கருத்துவேறுபாட்டைக் களைந்து பிரச்னைகளை சுமுகமாக பிரச்னைகளை தீர்க்க முயல்வது நல்லது. பண வரவு குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.
மகரம்
அனுகூலமான நாளாக இருக்கும். நற்பலன்கள் நிறைந்து காணப்படும். முயற்சிகள் வெற்றிபெறும். வேலை சூழல் மகிழ்ச்சியானதாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது.
கும்பம்
சாதகமான நாளாக இருக்காது. தவறுகள் நடைபெறலாம். வளர்ச்சி குறித்த கவலை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. நிதி தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மீனம்
ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். சாதகம் மற்றும் பாதகமான பலன்களைக் கொண்ட நாளாக இருக்கும். என்ன நடந்தாலும் அமைதியாக, மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள். வேலை சூழல் மந்தமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே உறவில் விரிசல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். சிக்கனமாக செலவு செய்வது மிகவும் அவசியம்.