• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை ஜூலை 24, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆடி 8 I சனிக்கிழமை I ஜூலை 24, 2021

மேஷம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் புத்துணர்வு அளிக்கக் கூடியதாக இருக்கும். உற்சாகத்துடன் வேலைகளைச் செய்து குறித்த நேரத்துக்கு முன்னதாகவே முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். துணைவருடன் இனிமையாக பேசுவீர்கள். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

அமைதியுடனும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. இப்படி இருந்தால் இன்று எல்லாமே நல்லதாகவே நடக்கும். வேலை சூழல் சவாலானதாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அகந்தை போக்கு நிலவும். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்

கடின உழைப்பை, முயற்சியை வெளிப்படுத்த வேண்டிய நாள் இன்று. கடின உழைப்பின் மூலம் நிச்சய வெற்றியைப் பெறலாம். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

பரபரப்பான நாளாக இருக்கும். கூடுதல் பொறுப்புக்கள் உங்கள் மீது சுமத்தப்படலாம். மனதில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கலாம்.

கன்னி

பதற்றமான சூழல் கொண்ட நாளாக இருக்கும். இன்றைய நிகழ்வுகள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் கவலை, மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.

துலாம்

சுமுகமான நாளாக இருக்காது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியை அளிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அப்படி உழைத்தும் கெட்ட பெயர் ஏற்படும் சூழல் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழல் நிலவும். கணவன் மனைவி நல்லிணக்கத்தைப் பராமரிக்க அமைதியாக இருப்பது நல்லது. பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

விருச்சிகம்

சாதகமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை சூழல் மகிழ்ச்சியானதாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு மேம்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

தனுசு

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் சமுகமாகக் கழியும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்காது. குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்படலாம். எதையும் லேசாக எடுத்துக்கொள்வது சகஜநிலையை தக்க வைக்க உதவும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

மகரம்

வளர்ச்சி தடைபடலாம். வெற்றி பெற திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வேலை சூழல் சிக்கலானதாக மாறலாம். வேலையில் தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவரின் விருப்பம் அறிந்து நடப்பதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். சோம்பல், சோர்வு அதிகரிக்கும். எண்ணங்களில் தெளிவின்மை ஏற்படும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கைக் கைவிட வேண்டும். மனதில் குழப்பம் அதிகரிப்பதால் குடும்பத்தில் அதை வெளிப்படுத்துவீர்கள். இதைத் தவிர்ப்பது குடும்பத்தில் அமைதியைத் தக்க வைக்க உதவும். பண இழப்புக்கு வாய்ப்பு அதிகம்.

மீனம்

செழிப்பான நாளாக இன்று இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையைச் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்வீர்கள். நிலுவையிலிருந்த பணிகளை எல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும்.

  • Share on

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை ஜூலை 23, 2021

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை ஜூலை 26, 2021

  • Share on