பிலவ வருடம் I ஆடி 7 I வெள்ளிக்கிழமை கிழமை I ஜூலை 23, 2021
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடம்பில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவில் நிம்மதி இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் தோல்வி அடைய வாய்ப்புகள் உண்டு என்பதால் மனதை தளர வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாம் மனிதர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபா ரத்தில் உங்களுக்கு மறை முகமாக தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் பிரச்சனைகள் நீங்கும். கணவன்-மனைவி அன்பில் ஒற்றுமை பலப்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உண்டாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங் களில் பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். போட்டியாளர்கள் மூலம் புது உற்சாகம் உங்களுக்கு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் கைகளில் பணப்புழக்கம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காணலாம். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அரசு வழி காரியங்களில் காலதாமதத்தை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளிடம் இணக்கமாக செல்வது உத்தமம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் நிலவ வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலம் பற்றிய பயம் மேலோங்கி காணப்படும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சுய தொழிலில் அதிக லாபம் காண்பீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தொட்ட காரியங்க ளெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் சிலரை வெற்றி கொள்வீர்கள். கணவன் மனைவி உறவில் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக செய்ய முடியாத சில விஷயங்கள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி இருக்கும். சுய தொழிலில் லாபம் காணலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பகைகள் ஒழியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான மன கசப்புகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்க்கும் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அனாவசியப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முதலீடுகள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறு விஷயங்களில் கூட முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முக்கிய பொறுப்புகளை மூன்றாம் நபர்களை நம்பி ஒப்படைப் பதில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலன் தரும் வகையில் அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரளமாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர் களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும்,